வேலூரில் ரம்ஜானை முன்னிட்டு ஆர்.என்.பாளையத்தில் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்பு.

தொழுகையின் போது மின் வெட்டு ஏற்பட்டதால் இரண்டாவது முறையாக தொழுகை நடத்த கோரிக்கை இரண்டாவது முறையாக தொழுகை நடத்தப்பட்டது பாதியிலேயே மின் வெட்டு ஏற்பட்டதால் இஸ்லாமிய மக்கள் அதிர்ச்சி.
வேலூர் மாவட்டம் வேலூர் ஆர்.என்.பாளையத்தில் ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் திருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகையானது நடந்தது ரம்ஜானை முன்னிட்டு ஒருவரை ஒருவர் கட்டி தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர் மேலும் சிறப்பு தொழுகையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகை நடத்தினார்கள்.
ஈகை திருநாளான ரம்ஜானை முன்னிட்டு நோன்பிருந்து இன்று ரம்ஜானை அவர்கள் கொண்டாடினார்கள் இதே போன்று காட்பாடி, கொணவட்டம் ,சத்துவாச்சாரி குடியாத்தம், பேர்ணாம்பட்டு, போன்ற இடங்களிலும் மாவட்டத்தில் ரம்ஜான் தொழுகை நடந்தது இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகை நடத்தினார்கள்.
அப்போது ஒரு நிமிடத்திலேயே தொழுகை துவங்கியவுடன் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் தொழுகை தடைப்பட்டது இருப்பினும் சிலர் தொழுகையை தொடர்ந்து நடத்தினார்கள் பிறகு ஒரு சாரார் தொழுகையில் தடங்கல் ஏற்பட்டதால் மீண்டும் தொழுகை நடத்த கோரிக்கை வைத்தனர் அதனை ஏற்று இரண்டாவது முறையாக மீண்டும் தொழுகை நடத்தப்பட்டது.