தேனி மாவட்டம் பூதிப்புரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் காற்றுடன் கூடிய மழையால் பல நூறு தென்னை மற்றும் வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து சேதம்.
தேனி மாவட்டம் பூதிப்புரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தென்னை, வாழை உள்ளிட்ட சாகுபடி பல ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்த காற்றுடன் கூடிய மழையால் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த தென்னை மற்றும் வாழை மரங்கள் ஒடிந்து விழுந்து சேதமானது.
பூதிப்புரம் சன்னாசியப்பன் மலைக் கோயிலுக்கு செல்லும் வழியில் வீசிய புயல் காற்றால் சுமார் 200க்கும் மேற்பட்ட தென்னை மற்றும் வாழை மரங்கள் ஒடிந்து விழுந்தது. மேலும் மின் கம்பங்களும் ஒடிந்து விழுந்தது.
நல்வாய்ப்பாக முன்கூட்டியே மின் விநியோகம் நிறுத்தப்பட்டதால் அசம்பாவிதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.
இயற்கை சீற்றத்தால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.