தொழிலாளர்கள் வேலைநேரம் 12 மணிவரை என்பதை திரும்ப பெற வேண்டும் – தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள்.

12 மணி நேர வேலை திரும்ப பெற வேண்டும் – தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு – சா.அருணன் வேண்டுகோள்.
நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளன்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கொண்டு வந்த தொழிலாளர் நல சீர்த்திருத்த மசோதா தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, அதாவது ஒன்றிய அரசை பின்பற்றி தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரம் என்பதை 12 மணி நேரமாக உயர்த்தி வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை மீதி, மூன்று நாட்கள் விடுமுறை என்று அறிவித்து சட்டமன்றத்தில் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது எதை காட்டுகிறது என்றால் இனி வரும் காலங்களில ஒப்பந்த அடிப்படையிலேயே ஊழியர்களை நியமனம் செய்வதற்கான ஒரு முன்னேற்பாடாக இருக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, ஏன் இதை குறிப்பிட்டு சொல்கிறோம் என்றால் 12 மணி நேரம் வேலை செய்து விட்டு அடுத்த நாள் விடுமுறை என்றால் தொடர்ச்சியான வேலையாக எப்படி ஏற்கும் அரசு, எப்படி நிரந்தர ஊழியராக கருத முடியும் என்ற பல கேள்விகள் எழுகிறது.
ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன் தொழிலாளர்கள் பல மணி நேரம் அடிமைப்பட்டு மணிக்கணக்கில் நாள் கணக்கில் வேலை செய்தார்கள் இந்த கொடுமையை போக்க சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பணியாளர்களின் கொடுமையை அறிந்து உணர்ந்து பணியாளர்கள் நேரம் காலவரையின்றி பணியாற்றியதை ஒழுங்குப்படுத்தி முறைப்படுத்தி தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரமாக குறைத்து சட்டமாக்கி ஊழியர்களை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டெடுத்தார்.
அவர் ஏற்றிய சட்டத்தையும் தொழிலாளர்களின் தியாகத்தை குழித் தோண்டி புதைப்பதற்கு சமமானது , ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத சட்டத்திற்கு துணை போவதாகவே அமைந்து விடும்,
ஆதலால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனி கவனம் செலுத்தி தொழிலாளர்களின் வேலை நேரம் 12 மணி நேரம் என்பதை கைவிட்டு தற்போது இருப்பதை போன்று வேலை நேரம் 8 மணியே என்ற அறிவிப்பை அறிவித்து தொழிலாளர்களின் நலன் காக்கும் அரசு என்பதை பறைச்சாற்ற தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.