BREAKING NEWS

மணல் கடத்தலுக்கு மாமூல் கேட்ட வாணியம்பாடி வட்டாட்சியர் தற்காலிக பணியிடை நீக்கம். மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

மணல் கடத்தலுக்கு மாமூல் கேட்ட வாணியம்பாடி வட்டாட்சியர் தற்காலிக பணியிடை நீக்கம். மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் பாலாற்று படுகையில் தொடர்ந்து இரவு பகலாக மணல் கடத்தப்பட்டு வருகிறது.

இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் இரவு பகலாக மணல் கொள்ளை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்த நிலையில்,

 

மணல் கொள்ளையில் ஈடுபடும் உதயேந்திரம் பேரூராட்சி 10 வது வார்டு திமுக உறுப்பினர் ரஞ்சனியின் கணவர் ராஜீ என்பவரிடம் வாணியம்பாடி வட்டாட்சியர் சம்பத் போன் செய்து தனக்கு சேர வேண்டிய மாமூலை கேட்கும் ஆடியோ கடந்த 2 நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில்,

வாணியம்பாடி வட்டாட்சியராக பணியாற்றி வந்த சம்பத் என்பவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

 

மேலும் திருப்பத்தூர் கோட்ட கலால் பிரிவு தாசில்தாராக பணியாற்றி வந்த சாந்தி என்பவரை வாணியம்பாடி வட்டாட்சியராக நியமனம் செய்தும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

Share this…

CATEGORIES
TAGS