BREAKING NEWS

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கிணற்றில் தற்கொலைக்கு செய்து கொண்ட வாலிபர்; 19 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உடல் மீட்பு.

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கிணற்றில் தற்கொலைக்கு செய்து கொண்ட வாலிபர்; 19 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உடல் மீட்பு.

ராணிப்பேட்டை மாவட்டம்; கலவை அருகே குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக
கிணற்றில் தற்கொலைக்கு செய்து கொண்ட வாலிபரை மழையில் நனைந்தவாறு 19 மணி நேரமாக தேடி வாலிபரின் உடலை மீட்ட தீயணைப்பு வீரர்கள்.

 

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள அரும்பாக்கம் மதுரா குருமுடிதாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பலராமன் என்பவரின் மகன் வினோத் வயது ( 25) தாய் மற்றும் தந்தையுடன் வசித்து வரும் இவர் சொந்தமாக அந்த கிராமத்தில் பாத்திரங்களுக்கு கலாய் பூசும் தொழில் செய்து வருகின்றனர்.

 

மேலும் சற்று மனநிலை பாதிக்கப்பட்டுள்ள இவர் நேற்று மாலை அதிககுடிபோதையில் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவரது தந்தை மற்றும் தாய் ஆகியோர் குடிபோதையில் இருந்ததை பார்த்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் மன உளைச்சலான அவர் நேற்று மாலை 5 மணி அளவில் அதே பகுதியில் உள்ள சீனிவாசன் என்பவரின் விவசாய கிணற்றில் குதித்து தற்கொலைக்கு செய்துள்ளார்.

 

இதனைக் கண்ட அப்பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் கலவை காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளித்ததின் பேரில் காவல்துறை மற்றும் தீயணைப்பு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்ட வாலிபரை சுமார் ஐந்து மணி நேரத்துக்கு மேலாக இரவு முழுவதும் தேடும் பணியில் ஈடுபட்ட போதும் நீண்ட நேரம் ஆகியும் வாலிபர் கிடைக்காததால் தீயணைப்பு வீரர்கள் பெய்த மழை பெய்த காரணமாக மீண்டும் இன்று காலை கிணற்றில் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

 

பின்னர், 19 மணி நேரமாக தேடிய போது காலை 11.00 மணிக்கு வாலிபரின் உடலை மீட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கலவை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS