செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியத்தில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் நியமன ஆலோசனை கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி செம்பனார் கோவில் தெற்கு ஒன்றியம், தரங்கம்பாடி பேரூராட்சி திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பூம்புகார் சட்டமன்ற தொகுதி பார்வையாளரும், மாநில இளைஞரணி திமுக துணை செயலாளர் இளையராஜா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கரன் பந்தல் கடை வீதியில் உள்ள ரமாட்டி திருமண மண்டபத்தில் செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் எம். அப்துல்மாலிக் செய்திருந்தார்.
கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை மற்றும் புதியதாக ஒரு கோடி உறுப்பினர்களை சேர்ப்பது மற்றும் கட்சிப் பணி குறித்தும் மாவட்ட திமுக செயலாளர் சிறப்புரை ஆற்றினார்,
இந்நிகழ்ச்சியில் தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், மாவட்ட திமுக துணை செயலாளர் மு. ஞானவேலன், செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.அன்பழகன், அமுர்த விஜயகுமார், தரங்கை பேரூராட்சி திமுக செயலாளர் முத்துராஜா மற்றும் திமுக ஊராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.