தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் படுகொலை செய்த கொலையாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி மாவட்ட முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ்
மணல் கடத்தலை தடுத்த காரணத்தால் அவரை நேற்று அவரது அலுவலகத்தில் மணல் மாபியா கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலை கண்டித்து தமிழக முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பல்வேறு ஊழியர் சங்கங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருச்சியில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம்,
வருவாய்த்துறை அலுவலர் சங்கம், கிராம நிர்வாக அலுவலர் சங்கம், கிராம உதவியாளர் சங்க கூட்டமைப்பு ஆகியவை சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், படுகொலை செய்த நபர் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 300க்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.