தேனி மாவட்டத்தில் காணாமல் போன 105 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு.
தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போன செல்போன்கள் தொடர்பாக மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் புகார் மனு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து தேனி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சைபர் க்ரைம் பிரிவு போலீசார் உதவியுடன் கண்காணிப்பில் ஈடுபட்டு காணாமல் போன செல்போன்களின் ஐஎம்ஈ எண்களை வைத்து தேடும் பணி நடைபெற்று வந்தது.
இதில் தேனி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 17 செல்போன்களும் போடி பகுதியில் 12 செல்போன்கள் உத்தமபாளையம் பகுதியில் 14 செல்போன்கள் பெரியகுளம் பகுதியில் 21 செல்போன்களும் அதிகபட்சமாக ஆண்டிபட்டி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 41 செல்போன்கள் என மாவட்டம் முழுவதும் 105 செல்போன்கள் மீட்கப்பட்டு இன்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்தாரர்களிடம் எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்ரே இந்த செல்போன்களை ஒப்படைத்தார். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கானாமல் போன செல்போன்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளது. மேலும் மீட்கப்பட்டாத செல்போன்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.