திமிரி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி – மூன்றாம் பருவம்
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்தில் பணியாற்றும் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 2023 -24 ஆம் கல்வியாண்டிற்கான மேம்படுத்தப்பட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சியானது. 24.04.2023 முதல் 26.04.2023 வரை திமிரி அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இப்பயிற்சியில் 1 முதல் 3 வரை கற்பிக்கும் 149 ஆசிரியர்கள் பங்கேற்றனர். இப்பயிற்சியின் நோக்கமானது எண்ணும் எழுத்தும் திட்டத்தில் வரும் கல்வியாண்டில் 2023-24 ஆசிரியர் கையேட்டில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் அதிலுள்ள செயல்பாடுகளை எவ்வாறு செயல்படுத்தலாம் குறித்தும் விவாதிக்க வாய்ப்பளிக்கப்பட்டது.
தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் என மூன்று பாடங்கள் மூன்று வகுப்பறைகளில் ஆசிரியர்கள் பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் பயிற்சியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் குமரேசன், முன்னிலையில் நடைபெற்றது.
பயிற்சியின் முதல் நாளில் வகுப்பறையில் மாணவர்கள் எவ்வாறு செயல்பாடுகள் மூலம் ஆயத்தபடுத்த வேண்டும் என்று டிஜஇதி விரிவுரையாளரும், பயிற்சி ஒருங்கிணைப்பாளரும் ஐயப்பன் விளக்கினார். மேலும் இரண்டாம் நாள் பயிற்சியில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மணி , பங்கேற்று பயிற்சியின் நோக்கத்தை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் ,என்று விளக்கினார்.
அதேபோல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இளையராஜகோபால் மற்றும் வித்யா ,ஆகியோர் பங்கேற்று பயிற்சி நடைபெறும் விதத்தை பார்வையிட்டார்கள். ஒவ்வொரு ஆசிரியரும் மூன்று பாடங்களில் மாதிரி வகுப்புகள், வில்லுப்பாட்டு உள்ளிட்டவைகள் பிற ஆசிரியர்கள் செய்துகாட்டினார்கள். இப்பயிற்சி, ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.