BREAKING NEWS

பல கோடி மதிப்புலான சொத்துக்கள் உள்ள கொல்லா சிங்கண்ன செட்டி அறக்கட்டளையை காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

பல கோடி மதிப்புலான சொத்துக்கள் உள்ள கொல்லா சிங்கண்ன செட்டி அறக்கட்டளையை காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

 

காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ள சிங்கண்ண அறக்கட்டளை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் ஆளுகையின் கீழ் உள்ளது.

இதற்கு காஞ்சிபுரம் மற்றும் பல்வேறு இடங்களில் சுமார் 380 ஏக்கர் நிலங்கள் அமைந்துள்ளது. இதன் வாரிசு பரம்பரை அரங்காவலராக சந்திரசேகர் என்பவர் செயல்பட்டு வந்தார்.

இவர் கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களை விற்கவும் நீண்ட கால குத்தகை விடவும் தவறான நோக்கத்தில் நிர்வாகம் செய்துள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்தது.

 

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை சொத்துக்களை பாதுகாக்க ஆணையர் உத்தரவின் பேரில் பரம்பரை அரங்காவலர் சந்திரசேகரை இந்து சமய அறநிலை சட்டப்பிரிவு 53 கீழ் தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நிர்வாக மேம்படவும் ஏகாம்பரநாதர் திருக்கோயில் செயல் அலுவலர் தக்கராக நியமனம் செய்து என ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.

ஏற்கனவே அறங்காவலர் பல்வேறு வழக்குகளை நீதிமன்றத்தில் தொடர்ந்தும், இந்து சமய அறநிலையத்துறை அதற்கான வாதங்களை மற்றும் செயல்முறைகளை முறையாக கடைபிடித்து வந்ததும் கூறிப்பிடத்தக்கது.

 

 

இன்று செயல் அலுவலர் முத்துலட்சுமி, காஞ்சிபுரம் மண்டல இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் லட்சுமிகாந்தன் பாரதிதாசன் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் பொறுப்பேற்பதற்கு வந்த நிலையில் அறங்காவலர்களின் வாரிசுகள் மற்றும் அவர்களின் வழக்கறிஞர்கள் என பல ஆட்சேபனை தெரிவித்தும், காவல்துறை பாதுகாப்புடன் அவர்களை அங்கிருந்து அகற்றப்பட்டு, இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நீதிமன்றத்தை நாடவும் அறிவுறுத்தினர்.

 

இதன்பின் செயல் அலுவலர் தனது உதவியாளர்கள் உதவியுடன் அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் கணக்கெடுக்கப்பட்டு அனைவரும் முன்னிலையில் கட்டுப்பாட்டு கீழ் கொண்டு வந்தார்.

முழுக்க முழுக்க அரசு விதிகளை மீறியதும், எந்தவித அனுமதியும் வராமல் தங்கும் விடுதிகள் நடத்தியது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் அவர்களுக்கு எதிராகவே உள்ளது.

இந்நிகழ்வின் போது சிவகாஞ்சி காவல்துறையினர், இந்து சமய அறநிலையத்துறை நிலப்பிரிவு வட்டாட்சியர் வசந்தி, செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள இந்த கொல்லா சிங்கண்ன செட்டி கட்டளை நிர்வாகம் இந்து சமய அறநிலைய துறையின் கீழ் வந்தது பல்வேறு நீண்ட கால நிகழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

CATEGORIES
TAGS