திருமானூர் அருகில் ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலய 292ஆம் தேர்பவனி பெறுவிழா

அரியலூர்மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உடபட்ட சுற்றுலா தலங்களிலில் ஒன்றான 1716 ஆண்டு வீரமாமுனிவரால் கட்டப்பட்ட பழமைவாய்ந்த 53 அடி உயரமுள்ள மாதா பித்தளை சுரூபம் மற்றும் ஜெபமாலை பூங்கா அமையபெற்றுள்ள.
திருக்கருக்காவூர் எனும் ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலய 292ஆம் ஆண்டு திருவிழா கடந்த ஏப்ரல் 22.தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது இதனை தொடர்ந்து ஏப்ரல் 29 தேதி இன்று மாலை சனிகிழமை மாலை 6 மணிக்கு கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி மின்விளக்குகளுடன் அலங்கரிக்கபட உள்ள அலங்கார தேரை மந்திரித்து தேர்பவனியை தொடங்கவைக்க உள்ளார்.
பங்குதந்தை அதிபர் தங்கசாமி திருவிழாவை பற்றி கூறுகையில்
ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்திற்கு வெளி மாநிலத்திலிருந்து ஆந்திரா கர்நாடகா கேரளா பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாடு வெள்ளி மாநிலங்களிலிருந்தும் சுமார் 5000 பக்தர்கள் வர இருப்பதாக கூறினார் மேலும் மாற்று மதத்தினர் கோவிலுக்கு வந்து தங்களின் உடல் நோயை தீர்க்க மாதா எண்ணெயும் மாதா குளத்து மண்ணையும் பெற்று செல்ல இருப்பதாகவும் திருவிழாவிற்கு தேவையான அனைத்து சுகாதார வசதிகளும் மின்விளக்கு வசதிகளும் செய்திருக்கின்றோம் என்று கூறினார்.