மயிலாடுதுறையில் வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் வேலை நாடுனர்களுக்கு பணி நியமன அணை வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி மேல்நிலைப் பள்ளியில் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு முன்னணி நிறுவனங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் ஆகியோர் பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமன ஆணையை வழங்கி மாவட்ட
ஆட்சியர் பேசியதாவது;-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் சிரிய முயற்சியால் தமிழக முழுவதும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இது போன்ற வேலைவாய்ப்பு முகாம்களை இளைஞர்கள் பயன் படுத்திக்கொள்ள வேண்டும். அதேபோல மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகள் மூலம் தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட உதவி ஆய்வாளர் தேர்வில் முதல் நிலை மற்றும் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்முகத் தேர்வுக்காக தயாராகி வந்த மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்களுக்கு மாதிரி நேர்முகத் தேர்வு மயிலாடுதுறை மாவட்ட காவல் துறையுடன் இணைந்து நடத்தப்பட்டதில் மூன்று மாணவர்கள் உதவியாக ஆய்வாளராக பணியில் சேர்ந்து தற்போது பயிற்சி பெற்று வருகின்றனர்.
மேலும் கடந்த 21.5.2022 அன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி. Gr2/2 A முதல் நிலை தேர்வில் இம்மையத்தால் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் வாயிலாக 48 இளைஞர்கள் கடந்த 24.2.2023 அன்று நடைபெற்ற முதன்மை தேர்வு எழுதி உள்ளனர். கடந்த மாதம் வெளியான TNUSRB Police constable இறுதி முடிவில் இம்மையத்தின் ஆறு மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில் 570 வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. HCL நிறுவனத்தின் வாயிலாக மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு பணிகள் வழங்கப்படுகிறது. உங்களுடைய எதிர்காலத்தை நீங்கள் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.
வேலை வாய்ப்பு முகாமில் 809 வேலை நாடுநர்கள் வருகை தந்துள்ளார்கள். 63 முன்னணி நிறுவனங்கள் வருகை தந்துள்ளன. இம் முகாமில் 158 நபர்களுக்கு வேலை வாய்ப்பு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் வ.யுரேகா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பழனிவேலு, மயிலாடுதுறை ஒன்றிய குழுத்தலைவர் காமாட்சி மூர்த்தி, கொள்ளிடம் ஒன்றிய குழுத் தலைவர் ஜெயபிரகாஷ், மயிலாடுதுறை நகர்மன்றத் தலைவர் செல்வராஜ், குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.