BREAKING NEWS

சித்ரா பௌர்ணமி விழாவிற்காக காஞ்சிபுரம் நடாவி கிணறு சென்னை உழவார பணி குழுவினரால் சிறப்பாக தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது.

சித்ரா பௌர்ணமி விழாவிற்காக காஞ்சிபுரம் நடாவி கிணறு சென்னை உழவார பணி குழுவினரால் சிறப்பாக தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி அன்று ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஐயங்கார் குளம் பகுதியில் அமைந்துள்ள பல ஆயிரம் நூற்றாண்டை கடந்த நடாவி கிணற்றில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

 

இந்த நடாவி கிணறு பூமி தரை மட்டத்திலிருந்து சுமார் 20 அடி ஆழத்தில் கல் மண்டபம் பல ஆயிரம் நூற்றாண்டுக்கு முன்பே கட்டப்பட்டு கோடை வெப்பத்தை தணிக்க குளிர்ச்சியாக அங்கு திருமஞ்சனம் மேற்கொள்வதாக ஐதீகம்.

 

 

இந்நிலையில் சித்ரா பௌர்ணமி விழா வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது அதற்கான முன்னேற்பாடுகளை ஸ்ரீ பெருந்தேவி தாயார் தேவர் அன்னதான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

நேற்று அப்பகுதியில் சூழ்ந்துள்ள நீரை மின்மோட்டார் மூலம் இறைத்து நிறைவு செய்த நிலையில் இன்று சென்னை மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த ஸ்ரீ ஜெகத்குரு சேவாஸ் உழவார பணி குழுவினர் சுமார் 30க்கும் மேற்பட்டோர் நடாவி கிணற்றினை தூய்மைப்படுத்தும் பணியில் காலை 8 மணி முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

இது குறித்து கூறுகையில் இது தங்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுவதாகவும், இன்று மாலைக்குள் அனைத்தையும் நிறைவு செய்து அக்குழு இடம் ஒப்படைத்து விடுவோம் எனவும் தெரிவித்தனர்.

 

தமிழகம் முழுவதும் இது போன்ற உழவாரப் பணிகள் செய்ய தயாராக உள்ளதாகவும் இதற்கு முறையான அணுகுமுறை தேவை என்றும் தெரிவித்தனர். இக்குழுவில் உள்ள அனைவரும் சுமார் 60 வயதை தாண்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS