BREAKING NEWS

பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், ஆகவே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்; மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேச்சு.

பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், ஆகவே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்; மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேச்சு.

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள் கிராம சபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேச்சு.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரிகிரி கிராமத்தில் மே தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் நடந்தது இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம பெண்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கலந்துகொண்டார் மக்கள் உறுதிமொழியை எடுத்துகொண்டனர் மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது இந்த கூட்டத்தில் வரவு செலவுகள் மேற்கொள்ளபடவுள்ள திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் காட்பாடி வட்டாச்சியர் ஜெகதீஸ்வரன் கரிகிரி ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜ் ,ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன், ஊராட்சி ஒன்றிய குழு, துணைத் தலைவர் சரவணன் திமுக ஒன்றிய செயலாளர் தணிகாசலம் மாவட்ட கவுன்சிலர்கள் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கலந்துகொண்டு பேசுகையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது உங்கள் கிராமத்தில் ரூ.4. 35 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது பள்ளி கட்டிடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கிராமங்களுக்கு செய்து வருகிறோம்.

தமிழக முதல்வர் நகர்புறங்களில் செயல்படுத்தப்பட்டு வந்த மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டால் கிராமப்புற மாணவர்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தபடவுள்ளது இதன் மூலம் ஏழை மாணவர்கள் பசியின்றி கல்வி பயில் பெரும் உதவியாக இருக்கும் என பேசினார்

CATEGORIES
TAGS