திருநெல்வேலியில் அரசு பள்ளிக்கு சிசிடிவி கேமரா அன்பளிப்பு அளித்த முன்னாள் மாணவர்கள்
திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் காமராஜர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக கல்விப் பணியை சிறப்பாக செய்து வருகிறது. இப்பள்ளி மாணவர்கள் சந்திக்கும் முன்னாள் மாணவர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இப்பள்ளியின் முன்னாள் மாணவரும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர்.திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் துறைத்தலைவர் மற்றும் கல்வி பொறுப்பாளர் எஸ்.போஜராஜ் அவர்கள் கலந்து கொண்டு பள்ளிக்கு தேவையான சிசிடிவி கேமராவை தனது சொந்த செலவில் அமைத்துக் கொடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் முனைவர் எஸ்.எஸ் சோமசுந்தரம் அவர்கள் முன்னிலையில் வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் திரு டானியல் ஆசீர் முன்னாள் மாணவர் வேலாயுதம் முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னு சாமி ஆகியோர் செய்திருந்தனர்.