BREAKING NEWS

எஸ்டிடியூ வின் தொழிற்சங்கம் சார்பாக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொடியேற்றி பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி.

எஸ்டிடியூ வின் தொழிற்சங்கம் சார்பாக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொடியேற்றி பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் எஸ்டிடியூ வின் தொழிற்சங்கம் சார்பில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை பகிர்வதோடு கிளை தலைவர் இசக்கி தலைமையில் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி, மற்றும் எஸ்டிடியூ வின் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் செயலாளர் சுடலை முத்து துணைத்தலைவர் ஜோசப் ராஜா, இணைச் செயலாளர் இசக்கி முத்து பொருளாளர் முருகன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் காசி விஸ்வநாதன், அப்துல், அந்தோணி, ராஜன், ராஜா, ஜாபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

இதில் சிறப்பு அழைப்பாளராக நெல்லை புறநகர் எஸ்டிடியூ வின் மாவட்ட தலைவர் கே.பி.சாகுல்ஹமீது எஸ்டிடியூ வின் தொழிற்சங்க கொடியினை ஏற்றி வைத்தார், மேலும் வீரை பேருராட்சி மன்ற தலைவர் திருமதி.எஸ்.சித்ரா பொதுமக்களுக்கு நீர் மோர் கொடுத்து துவங்கி வைத்தார். உடன் மாவட்டச் செயலாளர் ராஜேஷ் முத்து கலந்து கொண்டனர்.

சுமார் 150க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது. மேலும் எஸ்டிபிஐ கட்சியின் வீரை நகர செயலாளர் பஷீர், மற்றும் தாரிக், பாதுஷா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS