BREAKING NEWS

50-க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டி தீ வைத்த தனியார் செங்கல் சேம்பரை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்:-

50-க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டி தீ வைத்த தனியார் செங்கல் சேம்பரை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்:-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பாகசாலை ஊராட்சிக்கு உட்பட்ட கண்டமங்கலம் கிராமத்தில் கிராம ஊராட்சிக்கு சொந்தமான 50 பனை மரங்களை வேருடன் பெயர்த்து அப்புறப்படுத்தி தீயிட்டு கொளுத்திய தனியார் செங்கல் சூளை நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

பாகசாலை ஊராட்சி கண்டமங்கலம் கிராமத்தில் ஏசிஎஸ் என்ற தனியார் செங்கல் சேம்பர் கம்பெனி நடைபெற்று வருகிறது. களத்து புறம்போக்கை ஆக்கிரமித்து அரிசி ஆலை கட்டுவதாக ஊர் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதற்காக , சேம்பர் நிறுவனத்தின் ஊழியர்கள் அங்கிருந்த காய்த்து கொப்பும் கொலையுமாக தொங்கிக் கொண்டிருந்த 50-க்கும் மேற்பட்ட பனை மரங்களை வேரோடு பிடுங்கி அப்புறப்படுத்தி இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு கொண்டு சென்று தீ வைத்து எரித்துள்ளனர்.

இது தொடர்பாக கிராம மக்கள் சேம்பர் நிர்வாகத்தை சந்தித்து கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்து அனுப்பி உள்ளனர். இதனை அடுத்து கிராம மக்கள் சேம்பர் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இது தொடர்பாக பாகசாலை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். காவல் நிலையத்தில் இருந்து காவலர்கள் பொது மக்களை அழைத்து பேச்சு வார்த்தைக்கு வருமாறு தெரிவித்தனர் அதை தொடர்ந்து பொதுமக்கள் சேம்பர் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.

பேச்சுவார்த்தை சுமுகமாக முடியாததால் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் மனு அளித்தனர். கிராமத்துக்கு சொந்தமான களத்து புறம்போக்கை ஆக்கிரமித்து நிலத்தடி நீர் மற்றும் தமிழகத்தின் தேசிய மரமான பனை மரங்களை வெட்டி எரித்து சாம்பலாக்கும் செங்கல் சேம்பர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS