போடிநாயக்கனூர் பகுதிகளில் அடிப்படை வசதிகள் சார்பான போராட்டம்; போடி மூணார் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கீழத்தெரு பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாக்கடை வசதிகள், குடிநீர் வசதிகள், மற்றும் எம்ஜிஆர் காலத்தில் போடப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த அடிகுழாய் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இருந்த பொழுது அதனை நகராட்சி நிர்வாகம் பொது மக்களின் எதிர்ப்பை மீறி அடிகளாய் பம்பை அகற்றியதால் ஆத்திரமற்ற மக்கள் போடி மூணார் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு சற்று பரபரப்பான சூழ்நிலை உருவாகியது ஆண் பெண் என இருபாலரும் சாலையை மரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் பின் காவல்துறை தகவல் அறிந்து சாலை மறியலில் ஈடுபட்ட அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் இதில் அப்பகுதியில் உள்ள சாக்கடைகளை தூர்வார வேண்டும் என்றும் பாலம் அமைக்கப்பட்டு அதனை சரி செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அதனை சரி செய்ய வேண்டும் என்றும் அடிகுழாய் பம்பை பிடுங்கிய இடத்தில் மீண்டும் அதனை மாற்ற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை காவல்துறையிடம் நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்ததன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துணை கண்காணிப்பாளர் பெரியசாமி நகர் காவல் ஆய்வாளர் ராமலட்சுமி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி போராட்டத்தில் இருந்து அவர்களை கலைந்து செய்ய உத்தரவிட்டனர்.
அதன் அடிப்படையில் போராட்டத்தில் இருந்து சாலை மறையிலிருந்து கலைந்து சென்று தங்கள் பகுதியின் குறைகள் விரைவில் தீர்க்கப்படும் என அறிவித்தது அடிப்படையில் போராட்டத்தை கைவிட்டு சென்றனர் நகராட்சிய உடனடியாக அப்பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளையும் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.