பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற ஜமாபந்தி கநிகழ்ச்சியில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்தியாளர் சந்திப்பு.

தஞ்சாவூர் மாவட்டம்; பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முதல் நாளான ஜமாபந்தி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது .
இந்த ஜமாபந்தியில் பொதுமக்களிடம் 150 க்கு மேற்பட்ட மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார் ..
பெற்றுக்கொண்ட மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
மேலும் இம்மஹாவில் மூன்று பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது இதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது.
ஆன்லைன் பட்டா பதிவுகளை அதிகாரிகள் கொண்டு வாரம்தோறும் கண்காணிக்கப்படும் எனவும்,
ஆன்லைன் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு தனி அதிகாரி நியமித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் மேலும் தமிழக முதல்வரிடம் இரண்டாம் கட்ட நிதி ஒதுகீட்டிலிருந்து மேலவழுத்தூர் ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியின் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் கூறினார்.
செய்தியாளர் ஆர்.தீனதயாளன்.