BREAKING NEWS

பாபநாசத்தில் பகுதியில் தேவராயன் பேட்டை வாய்க்கால் தூர்வாரும் பணி மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு.

பாபநாசத்தில் பகுதியில் தேவராயன் பேட்டை வாய்க்கால் தூர்வாரும் பணி மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதிக்கு உட்பட்ட தேவராயன் பேட்டை குடமுட்டி ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் தேவராயன் பேட்டை பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஆனந்த் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தூர்வார்பட்ட வாய்க்கால்களை அளவீடு செய்து சரியான முறையில் வெட்டப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மாவட்ட கண்காணிப்பாளர் ஆனந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் திட்டமிடப்பட்டு 189 பணிகள் தேர்வு செய்யப்பட்டு 1046 கிலோ மீட்டர் அளவில் தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் பெய்த மழையின் காரணத்தால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதால் பணிகள் தொய்வடைந்தாலும் இந்த மாத இறுதிக்குள் தூர்வாரும் பணிகள் முழுமையாக முடிக்கப்படும் என தெரிவித்தார்.

 

ஆய்வின்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

CATEGORIES
TAGS