அந்தியூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட தலைவர் வழக்கறிஞர் செங்கோட்டையன் துணைத் தலைவர் கார்த்தி.
முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ் சி ஆர் கோபால் மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் திருமுருகன் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சேக் முகையதீன் அந்தியூர் நகரச் செயலாளர் மாதேஷ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னணி பிரமுகர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் வார்டு வாரியாக பூத் கமிட்டி அமைப்பது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அந்தியூர் நகர தலைவர் மோகன பாலச்சந்திரன் பசுமைத்தாயகம் ராஜேந்திரன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.