சோளிங்கர் அருகே அக்னி வசந்த விழாவை முன்னிட்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள தர்மராஜா கோயிலில் ஆண்டுதோறும் அக்னி வசந்த விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு அக்னி வசந்த விழா கடந்த 7 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி தினம்தோறும் மகாபாரத சொற்பொழிவு மற்றும் மகாபாரத தெருக்கூத்து நாடகங்களும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் பீமன் துரியோதனனை வதம் செய்யும் நிகழ்ச்சியை தெருக்கூத்து கலைஞர்கள் தத்ரூபமான நடத்தி காட்டினார்கள். இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் அக்னி வசந்த விழா சிறப்பாக நடைபெற்றது.
இதையொட்டி திரௌபதி அம்மன் மற்றும் பஞ்சபாண்டவர்கள் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர். காப்பு கட்டி விரதம் இருந்த ஏரளமான பக்தர்கள் எட்டு திக்கு நீர்நிலைகளில் நீராடிய பின்னர் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தி சுவாமியை வழிபட்டனர்.
இவ்விழாவை காண்பதற்காக சோளிங்கர், சோமசமுத்திரம் மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் வந்திருந்தனர்.. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.