ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் கொடிமரத்திற்கு மகா கும்பாபிஷேகம்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த நல்லூர் கிராமத்தில் ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் கடந்த 2007 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகமும் 2017 ஆம் ஆண்டு ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து இன்று காலை கோயிலில் கொடி மரத்திற்கு வேத பட்டாச்சியாளர்கள் யாக சாலையில் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வந்த புனித நீர் கலசத்தில் வைத்து வேத மந்திரங்கள் ஓதி பின்னர் வேத பட்டாச்சாரியார்கள் தலைமேல் கலசத்தை சுமந்து கொண்டு கோயிலை வலம் வந்தனர்.
பின்னர், கலவை சச்சிதானந்த சுவாமிகள் தலைமையில் கொடி மரத்துக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து புதியதாக தேர் செய்து கரிகாலம் நடைபெற்றது. நிகழ்ச்சியை விழா குழு பொறுப்பாளர்கள் நடராஜன், நாகராஜன், ரத்தினகுமார் ஐய்யர்கள் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம், ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.இதில் நல்லூர் சுற்றுவட்டார கிரமப்பதிலிருந்து திரளான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி அருளை பெற்றனர்.