BREAKING NEWS

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டையில ஒரு வாரத்திற்கு முன்பு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 பேர் தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

 

இதில் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் அந்த கிராமத்தில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் விதமாக தமிழக சுகாதாரத்துறை சார்பில் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் பாலசந்தர் தலைமையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

 

இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா பாபு, ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ், வட்ட சுகாதார மேற்பார்வையாளர் ரவிசந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS