தேனி மாவட்டம் கோம்பை பகுதியில் முன்விரோதத்தால் ஏற்பட்ட சண்டையில் வாலிபர் கொலை காவல்துறையினர் விசாரணை.
தேனி மாவட்டம் கோம்பை அணை மேடு பகுதியைச் சார்ந்தவர் மணிகண்டன். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது இரண்டாவது மகன் சதீஷ்குமார்(28), என்ற வாலிபர் கோம்பை பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் இரவு சதீஷ்குமார் தனது வீட்டு அருகே அமர்ந்து கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த கோம்பை பகுதியைச் சார்ந்த நான்குக்கும் மேற்பட்ட நபர்கள் சதீஷ்குமாரை கட்டை கம்பி போன்ற ஆயுதங்களால் பலமாக இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சதீஷ்குமார் உயிரிழந்தார். இது குறித்து கோம்பை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த கோம்பை காவல்துறையினர் இறந்த நிலையில் இருந்த சதீஷ்குமாரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து கோம்பை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் இறந்து போன சதீஷ்குமார் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாகவும் இதன் காரணமாக ஏற்கனவே நடைபெற்ற சண்டையில் முன்விரோதத்தை வைத்துக்கொண்டு கோம்பை பகுதியைச் சார்ந்த நபர்கள் சதீஷ்குமாரை தாக்கி கொலை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் கோப்பை பகுதியைச் சார்ந்த மணிகண்டன் பிரவீன் தீபக் புகழேந்தி உள்ளிட்டோரை கோம்பை காவல்துறையினர் பிடித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்விரோதத்தின் காரணமாக வாலிபர் அடித்துக் கொலை செய்த சம்பவம் கோவை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.