ராஜபாளையம் ஜவகர் மைதானம் எதிரே புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.
மரக்காணம் கள்ளச்சாராய மரணம், ஒரு லட்சம் கோடி டாஸ்மாக் ஊழல், பூரண மதுவிலக்கு, சட்ட விரோத பார்களை அகற்றுதல், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சிபிஐ விசாரணை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100 பேர் பங்கேற்பு.
போராட்டத்தில் கலந்து கொண்ட டாக்டர் ஷ்யாம் கிருஷ்ணசாமி பேட்டி.
குவாட்டருக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்குவது என்பது நாடெறிந்த விஷயம் – அதெல்லாம் சிறிய அளவிலான ஊழல் – 4000 மேற்பட்ட சட்டவிரோதப்பார்கள் நடக்கிறது – தமிழ்நாட்டில் கடந்த மூன்று தினங்களில் மட்டும் ராஜபாளையத்தில் மட்டும் 25க்கும் மேற்பட்ட பார்கள் மூடப்பட்டுள்ளது.
இது துறை சார்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தெரியாதா ? மாவட்ட அமைச்சருக்கு தெரியவில்லையா ? முதல்வருக்கு தெரியவில்லையா ? இதெல்லாம் தெரியவில்லை என்றால் ஆட்சி நடத்த துப்பில்லாதவர்கள் என்று தெரிகிறது.
தெரிந்திருந்தால் அவருக்கு நிச்சயம் பங்கு போயிருக்கும்.
ஒவ்வொரு பாரிலும் நாள் ஒன்றுக்கு ரூபாய் ஒன்று முதல் மூன்று லட்சம் வரை வியாபாரம் நடக்கிறது. இதை வைத்துப் பார்த்தால் 50 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் எங்குமே சட்ட விரோத பார் நடத்த புதிய தமிழகம் அனுமதிக்காது – ஜூன் 18ஆம் தேதிக்கு மேல் அதுபோன்ற சட்டவிரோத பார்கள் தமிழகத்தில் செயல்பட்டாலோ லைசென்ஸ் பாரில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் மதுபானங்கள் விற்றாலோ புதிய தமிழகம் அதை தடுத்து நிறுத்தும் – அது அமைதியான ஆர்ப்பாட்டமாக இருக்காது.
ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு முன் முன்பாக தமிழகத்தில் மது ஆலைகளை மூட வேண்டும் – ஆலைகளை மூடவிட்டால் நாங்கள் மூடுவோம் – ஸ்டெர்லைட் எப்படி மூடுனார்களோ அதே போல் நாங்கள் ஆலையை மூடுவோம் என்று நாங்கள் எச்சரிக்கை கொடுக்கிறோம்.
உச்சநீதிமன்ற வரை ஊழல் குற்றச்சாட்டு வைத்திருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் வைத்திருப்பது நியாயமானது அல்ல. ஸ்டாலின் அவர்கள் 5 ஆண்டுகளுக்கு முன் பேசியதில் திமுக ஆட்சி வந்தால் செந்தில் பாலாஜி சிறைக்குப் போவார் என்று. உடன் ஸ்டாலினையும் கூட்டிப் போவார்.
தமிழ்நாட்டில் பல இடங்களில் ரெய்டு நடக்கிறது அதற்கான ரிசல்ட் வருவதில்லை அதற்கு நான் ரிசல்ட் வந்தால் நல்லது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது அதற்குண்டான ஆதரங்களின் வைத்திருக்கிறோம். ஆளுநர் இடத்தில் சமர்ப்பித்துகிறோம்.
தமிழக அரசு கார்ப்பரேட் நிறுவனம் போல் புதிய டாஸ்மாக் திறப்பது மக்களை எப்படி குடிக்க வைப்பதற்கு என்பது முழு கட்டமைப்புடன் செயல்படுகிறது. எலைட் டாஸ்மாக் மூலம் 500 கோடி ரூபாய் ஊழல்க்ஷ நடந்துள்ளது. டாஸ்மாக்கை நம்பி தான் மொத்த ஆட்சியும் நடக்கிறது.
அதிமுக டாஸ்மாக்கு எதிராக போராட்டம் நடத்தினால் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கருத்து குறித்து கேட்டதற்கு
இதுவரை ஆதரவை நாங்கள் கேட்கவில்லை. வேறு ஒருவர் ஆர்ப்பாட்டம் நடத்தி ஆதரவு தெரிவிப்பதற்கு அவர் ஒரு கட்சியை வைத்திருப்பதால் அவரை ஆர்ப்பாட்டம் நடத்தலாம்.
போராட்டம் நடத்துவதற்கான எண்ணம் அவருக்கு இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறது. குஜராத்தில் நடப்பதற்கெல்லாம் போராட்டம் நடத்தியவர் அவர். போராடும் எண்ணம் இல்லை என்றால் இது போல் சுற்றிவளைத்து பேசுவது நடக்கும்.