வானியில் தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர்கள் சார்பில் ஊதிய உயர்வை வழங்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து பதாகை.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஊராட்சி கோட்டை மின்சாரவாரிய அலுவலகத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய தொ.மு.ச நிர்வாகிகள் மற்றும் மின்வாரிய தொழிலாளர்கள் சார்பில் 01.12. 2019. முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை வழங்க உத்தரவிட்ட தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோருக்கு…
நன்றி தெரிவித்து பதாகைகள் (பிளக்ஸ் பேனர்) மின்துறை காவலர் தமிழ்நாடு மின் கழக தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் மணிமாறன் பவானி ஊராட்சி கோட்டை மின்சாரவாரிய அலுவலகத்தில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்தி இனிப்புகள் வழங்கி பதாகைகள் வைத்து நன்றி தெரிவிக்கப்பட்டது.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.
CATEGORIES ஈரோடு