குப்பைகளை தினந்தோறும் அகற்ற வேண்டும்- நகர மன்ற தலைவர் அறிவுறுத்தல்!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம், தரணம்பேட்டை பஜார் உள்ளிட்ட முக்கிய இடங்களில் குப்பைகள் பல நாட்களாக அகற்றப்படுவதே இல்லை என கூறப்படுகிறது. மேலும் தினந்தோறும் குப்பைகளை அகற்ற வேண்டும் என நகரமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.
அதேபோல் நகரமன்ற தலைவரிடம் தரணம்பேட்டை பஜார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வியாபாரிகள் பொதுமக்கள் குப்பைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து நகரம் என்ற தலைவர்
எஸ். சௌந்தரராஜன் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் ம. மனோஜ், சி.என்.பாபு , சுமதி மகாலிங்கம், ரேணுகா பாபு, இந்துமதி, கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் திடீரென குடியாத்தம் தரணம்பேட்டை பஜார் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.
அப்பொழுது பல இடங்களில் குப்பைகள் பல நாட்களாக அகற்றப்படாமல் தேங்கியிருப்பது தெரிய வந்தது இதனை எடுத்து துப்புரவு பிரிவு அதிகாரிகளை அப்பகுதிக்கு அழைத்து உடனடியாக குப்பைகளை அகற்ற வேண்டும் என அங்கேயே நின்றனர்.
உடனடியாக தூய்மை பணியாளர்கள் வந்து தரணம் பேட்டை பஜார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குப்பைகளை அகற்றினார்கள் . அப்பொழுது அவர்களிடம் நகர மன்ற தலைவர் குப்பைகளை தினந்தோறும் அகற்ற வேண்டும் பல இடங்களில் பல நாட்களாக அகற்றப்படாமல் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
இதே நிலை நீடித்தால் துப்புரவு பிரிவில் உள்ள மேற்பார்வையாளர்கள், தூய்மை பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்தார்.
