BREAKING NEWS

இராணிப்பேட்டை மாவட்டம் தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம்

இராணிப்பேட்டை மாவட்டம் தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படியும்,  கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி அவர்களின் ஆலோசனைப்படியும் இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடக்கவிருக்கும் முத்தமிழ் அறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கூட்டங்கள் மற்றும் பூத் கமிட்டி, BLA 2 பணிகளில் எவ்வாறு சிறப்பாக பணயாற்றுவது என்பதை பற்றிய தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை கூட்டத்தில் கழக சுற்றுச்சூழல் அணியின் மாநில துணைச் செயலாளர் ஆர்.வினோத் காந்தி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி ஆலோசனைகளை வழங்கினார். 

இந்த கூட்டத்தை தகவல் தொழில்நுட்ப அணியின் அமைப்பாளர் தொன்போஸ்கோ அவர்கள் தலைமையேற்று நடத்தினார். இதில் வியட்நாம் அயலக அணியின் அமைப்பாளர் வேதா ஸ்ரீனிவாஸ் அவர்களும் ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் பிரகாஷ், பாலாஜி, ராம்கி, யுவராஜா, சல்மா, கார்த்திக் மற்றும் நகர, ஒன்றிய, பேரூர், அமைப்பாளர்கள், சமூக வலைதள அமைப்பாளர்கள், மகளிர் சமூக வலைத்தள அமைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். BLT சிவா உடனிருந்தார்.

CATEGORIES
TAGS