BREAKING NEWS

வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ ஜலகண்டேஷ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம்.

வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ ஜலகண்டேஷ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம்.

வேலூர் மாவட்டம் ஸ்ரீ ஜலகண்டேஷ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம் வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ ஜலகண்டேஷ்வரர் ஆலயத்தின் 4 வது மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக தற்போது நடைபெற்று வருகிறது.

ராஜ கோபுரம் உட்பட 8 கோபுர கலசங்களுக்கு கலசலம் பொறுத்தப்பட்டு புனித நீர் தெளித்து கும்பாபிஷேகம் நடைபெற்று வருகிறது. 600 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

3000 கோவிலுக்குள் செல்ல பேருக்கு சிறப்பு பாஸ் வழங்கப்பட்ட நிலையில் கோவில் வளாகம், கோட்டை வளாகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கதர்கள் குவிந்து ஓம் நம சிவாயா என முழக்கமிட்டு வருகின்றனர்.

சம்புவராயர்களால் கட்டப்பட்ட ஜலகண்டேஷ்வரர் கோவில் பின்னாலில் 16-ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசர்களால் கோவிலை சுற்று அகழியுடன் கோட்டை எழுப்பப்பட்டது.

பிரிட்டிஷ் காரர்கள் படையெடுப்புக்கு பின் கோட்டை லிங்ம் திருடப்பட்டு 400 ஆண்டுகள் மூடப்பட்டு வழிபாடு இல்லாமல் இருந்தது.

பின்னர் 1981-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி அப்போதைய மாவட்ட ஆட்சியர் கங்கப்பா முயற்சியில் இந்து சமயத்தினர் உதவியோடு இரவோடு இரவாக லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு 1982 ல் முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை அடுத்து தற்போது 4 வது மஹா கும்பாபிஷேகம் நடைபெற்று வருகிறது.

CATEGORIES
TAGS