மதுராந்தகத்தில் கொள்ளை யடிக்கப்பட்ட 13லட்சம் மதிப்பிலான செல்போன்கள் பறிமுதல்…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் காவல் நிலையத்திற்குட்பட்ட மதுராந்தகம் பஜாரில் இயங்கி வரும் டார்லிங் எலக்ட்ரானிக் ஷோரூமில் கடந்த 15.07.2023-ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் கடையின் இரும்பு சட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு ஷோரூமில் விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 13 இலட்சம் மதிப்பிலான ஆப்பிள், ஐபோன் உள்ளிட்ட உயர்ரக செல் போன்கள் மற்றும் உதிரிபாகங்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டது. அன்றைய தினமே மதுராந்தகம் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்துவிசாரணை மேற்கொள்ளப் பட்டது.
இது சம்மந்தமாக செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனித் உத்தரவின்படி. மதுராந்தகம் துணை காவல் கண்காணிப்பாளர் சிவசக்தி மேற்பார்வையில் மதுராந்தகம் காவல் நிலைய ஆய்வாளர் தர்மலிங்கம் தலைமையில் செங்கல்பட்டு மாவட்ட சைபர் க்ரைம் பிரிவு உதவி ஆய்வாளர் தனசேகரன், தனிப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன் ராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் குப்புசாமி மற்றும் இளங்கோவன், தலைமை காவலர்கள் கர்ணன், முத்துக்குமார், உமாபிரபு.
தனிப்பிரிவு காவலர் கவியரசன், காவலர்கள் மணிகண்டன், கார்த்திகேயன், பெண் காவலர் ஐஸ்வர்யா, சைபர் க்ரைம் பிரிவு காவலர்கள் முரளி. கலைவாணன் ஆகியோர் உதவியுடன் தனிப்டை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த மோகன் ராஜ், சென்னை கொடுங்கையூர் M.G.R. நகரைச் சேர்ந்த வினோத் என்கிற நைனா, கொடுங்கையூரை சேர்ந்த கனேசன் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு அவர்களிடமிருந்து விலை உயர்ந்த உயர் ரக செல் போன்களை கைப்பற்றி அவர்களை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த கொள்ளை சம்பவம் நடந்து 72 மணி நேரத்தில் இரவுபகலாக தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து கொள்ளை யடிக்கப்பட்ட செல்போன்களை கைப்பற்றிய அனைத்து காவலர்களையும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனித் வெகுவாக பாராட்டினார்.