புது கும்முடிபூண்டியில் 77- வது சுதந்திர தின விழாவை ஒட்டி அமைதி பேரணி நடைபெற்றது. 500- க்கும் மேற்பட்ட தமிழர்களும் வடை இந்தியர்களும் பங்கேற்று தனது தேசபக்தியை வெளிப்படுத்தினார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் கும்முடிபூண்டி அடுத்த புதுகும்முடிபூண்டியில் சுமார் 25 ஆயிரம் மேற்பட்டோர் ஆழ்ந்து வருகின்றனர் இவர்களில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் மட்டுமின்றி பிகார், ஒரிசா, ஹரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களைச் சார்ந்தவர்களும் வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் ஆண்டுதோறும் சுதந்திரதினத்தை அனைவரும் கொண்டாடும் விதமாக ஒன்று திரண்டு அமைதி நடத்துவது வழக்கம்.
இதையடுத்து இன்று 77- வது சுதந்திர தின விழாவை போற்றும் வகையில் 500- க்கும் மேற்பட்ட தமிழர்களும், வட இந்தியர்களும் பங்கேற்று மூவர்ண தேசிய கொடியுடன் பாரதமாதா வேடம்பட்டு படி சுமார் 5 கிலோமீட்டர் அமைதி ஊர்வல பேரணி நடத்தினார்கள்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய குழு பெருந்தலைவர் கே எம் எஸ் சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் மருத்துவர் அஸ்வினி சுகுமாரன் ஆகியோர் பங்கேற்றனர். புலவர் விஜயரங்கன், ஒன்றிய கவுன்சிலர்கள் சீனிவாசன் மதன் மோகன், புதுகுமுடிபூண்டி ஒருங்கிணைப்பாளர் சுகுமாரன், துணைத்தலைவர் எல்லப்பன், வழக்கறிஞர் ஆனந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.