BREAKING NEWS

அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உள்ளிட்ட ஐந்து பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பில் தொடர்ந்த அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையொட்டி மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் சார்பில் குமாரம் பிரிவில் ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமையில் பட்டாசு வெடிக்கும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையொட்டி முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆணைகினங்க மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் சார்பில் குமாரம் பிரிவில் ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமையில் பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

தொடர்ந்து இந்த உயர்நீதிமன்ற தீர்ப்பு தர்மத்திற்கும், நீதிக்கும் கிடைத்த வெற்றி என அதிமுக தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

CATEGORIES
TAGS