BREAKING NEWS

பிரதமர் மோடி மன்னிப்பு கோரினார். டெல்லி விமான நிலையத்தில் பேச்சு

பிரதமர் மோடி மன்னிப்பு கோரினார். டெல்லி விமான நிலையத்தில் பேச்சு

அடுத்த மாதம் டெல்லியில் நடைபெற உள்ள ஜி 20 மாநாட்டினால் டெல்லி மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தென்னப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு அதனைத் தொடர்ந்து அவர்கள் இடையே உரையாற்றிய பிரதமர் பின்னர் அங்கிருந்து டெல்லி வந்து சேர்ந்தார்.

டெல்லி விமான நிலையத்தில் திரண்டிருந்தவர்களிடையே பேசிய பிரதமர் மோடி, டெல்லியில் அடுத்த மாதம் 9 மற்றும் 10 தேதிகளில் ஜி 20 தலைவர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், விருந்தினர்கள் டெல்லி வர உள்ளனர். இதையொட்டி டெல்லியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்களால் டெல்லி மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களுக்காக மன்னிப்பு கோருகிறேன். ஜி 20 மாநாடு நடைபெற உள்ள நிலையில் டெல்லி மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார்.

CATEGORIES
TAGS