BREAKING NEWS

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயிகளின் முன்னிலையில் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளரை மாவட்ட ஆட்சியர் கோபமுடன் கண்டிப்பு.

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயிகளின் முன்னிலையில் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளரை மாவட்ட ஆட்சியர் கோபமுடன் கண்டிப்பு.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகளின் நலன் காக்கும் கூட்டம்மானது மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை மாவட்ட ஆட்சியர்யிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர், பின்னர் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயி ஒருவர் கூறுகையில் கூட்டுறவு சங்கங்களில் எப்பொழுது சென்று கேட்டாலும் யூரியா இருப்பு இல்லை என கூறுகின்றனர் இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஆட்சியரிடத்தில் மன வேதனையுடன் தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்த திருத்தணி கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் சி.வி.கருணாகரன், கூட்டுறவு சங்கங்களில் யூரியா இருப்பு உள்ளதாக மாவட்ட ஆட்சியரிடத்தில் பொய்யான தகவலை முன் வைத்தனர்.  பின்னர் மாவட்ட ஆட்சியர் குறுக்கிட்டு யூரியா இருப்பு இருந்தால் விவசாயி ஏன் இல்லை என்று கூறுகிறார் என கோபத்துடன் கேள்வி எழுப்பிய பின்னர் துணைப்பதிவாளர் யூரியா இருப்பு இல்லை என்பதை ஒப்புக்கொண்டார்.

விவசாயிகளிடம் எதற்காக பொய்யான தகவல்களை கொடுக்குறீங்க உங்களைப் போன்ற சீனியர் அதிகாரி இப்படி சொல்லக்கூடாது என கடுமையாக கண்டித்தார். இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் விவசாயிகளிடம் விரைவில் உங்களுக்கு தேவையான யூரியாவை உடனடியாக கிடைக்கும்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இச்சம்பத்தினால் விவசாய கூட்டங்களில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

CATEGORIES
TAGS