BREAKING NEWS

பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் பருவமழையை முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.

பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் பருவமழையை முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழைய முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் தாசில்தார் ராஜா தலைமையில் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புக்களை தடுக்கும் வகையில் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது,

நெடுஞ்சாலை துறையினர் புயல் காற்றிற்க்கு சாலையில்
சாய்ந்து விழும் மரங்களை போக்குவரத்திற்க்கு இடையூறு இல்லாமல் உடனடியாக அகற்ற வேண்டும்.

மின்சார துறையினர் மழையினால் ஏற்படும் மின் பாதிப்புக்களிலிருந்து உயிர் பலியாவதை தடுக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்,

சுகாதார துறையினர் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க தேவையான மருந்து மாத்திரைகள் இருப்பு வைத்திருத்தல் மேலும் கிராமங்களில் நோய் தொற்று கண்டறிந்து தேவையான மருத்துவ சிகிச்சையை உடனுக்குடன் வழங்க மருத்துவ முகாம்கள் நடத்துதல்,

தீயணைப்பு துறை சார்பாக மீட்பு பணிகள் தையார் நிலையில் வைத்திருத்தல் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS