கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் பள்ளி வளாகத்தில், இன்று வெற்றி சிலம்ப அகாடமி சார்பாக சிலம்பம் போட்டி

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் பள்ளி வளாகத்தில், இன்று வெற்றி சிலம்ப அகாடமி சார்பாக இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான சிலம்ப போட்டிகள் நடைபெற்றது, வெற்றி சிலம்ப அகாடமி நிறுவனர் பிரபு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை
ஹிந்துஸ்தான் பள்ளியின் முதல்வர்
சென்பகவள்ளி, மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பாக மருதாச்சலம் ஆகியோர் குத்துவிக்கேற்றி வைத்து போட்டிகளை துவக்கி வைத்தனர்,
இதனை தொடர்த்து மாணவர்கள் மத்தியில் பேசிய, சிலம்ப ஆசான் பிரபு கூறும் பொழுது, கோவை மீனா எஸ்டேட் பகுதியில், கடந்த 5 ஆண்டுகளாக எங்களது,
வெற்றி அகாடமி என்ற சிலம்ப பயிற்சி கூடம் இயங்கி வருகிறது,இங்கு இதுவரைக்கும் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் சிலம்பம் கற்றுள்ளனர்,
இன்று நடைபெறும் மாநில அளவிலான சிலம்ப போட்டியில், 4 வயது முதல் 15 வயது வரையிலான மாணவ மாணவியர்கள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர், திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர்,
இவர்களுக்கு, ஒற்றை கம்புவீச்சு, இரட்டை கம்புவீச்சு, ஒற்றை மற்றும் இரட்டை வாள் வீச்சு, கம்புசண்டை, வேல்வீச்சு, மான் கொம்புவீச்சு , அழங்கார வீச்சு, சுருள்வாள் வீச்சு, ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது, இதில் சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் மாணவ மாணவியர்களுக்கு மாலையில் பரிசுகளும், சான்றிதழ்களும், பதக்கங்களும், கோப்பைகளும் வழங்கபட உள்ளது அனைவரும் தங்களது திறமைகளை வெளிபடுத்த இது ஒரு நல்ல மேடையாக அமையும் என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.