அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் தேர்தல் காலத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை

சம வேலைக்கு சம ஊதியம் என்ற தேர்தல் கால திமுக வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் மயிலாடுதுறை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் தேர்தல் காலத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக சம வேலைக்கு சம ஊதியம், ஊதிய முரண்களை கலைந்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை பதிவு முன்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் மயிலாடுதுறை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் திமுக தேர்தல் வாக்குறுதியில் 311 ஆம் வாக்குறுதியாக பணி முரண்பாடுகளை களைவதாக தெரிவித்திருந்தது இதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை இதுவரை வெளியிடவில்லை. இதனை கண்டித்தும் உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்று தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
