BREAKING NEWS

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மட்டும் கலந்து கொண்ட மாநில அளவிலான நடை போட்டி நடைபெற்றது…

பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு பெண்கள் அதிகாரம் மற்றும் மனநலம், புற்றுநோய் தடுப்பு சமூக விழிப்புணர்வு மற்றும் சமூகப் பணியில் கேப்டன் விஜயகாந்த் நினைவாக

தன்வர்ஷன் அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான நடைபோட்டி நடைபெற்றது.

15 வயது முதல் 20 வயது வரை, 20 வயது முதல் 30 வயது வரை, 30 வயது முதல் 40 வயது வரை 40 வயது முதல் 50 வயது வரை, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என 5 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது.

தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் இருந்து துவங்கி 5 கி.மீ தூரத்திற்கான நடைப் போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS