ஓமலூரில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க பொதுமக்கள் ஆர்வம்.
தமிழகம் முழுவதும் மார்ச் 3ஆம் தேதியான இன்று ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு வரும் நிலையில்,
இதன் ஒரு பகுதியாக ஓமலூர் அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் ,ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய பகுதிகளில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் காலை முதலே ஏராளமான பெற்றோர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்தனர்.
போலியோ சொட்டு மருந்து கொடுத்த பின்னர், குழந்தைகளுக்கு கை விரலில் அடையாள மை இடப்பட்டது.
மேலும், இம் முகாமில் அரசு குழந்தைகள் நல மருத்துவர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள், செவிலியர்கள், மற்றும் ஆரம்ப சுகாதாரத்துறை ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
CATEGORIES சேலம்
TAGS சேலம் மாவட்டம்
