திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் சிவராத்திரியை முன்னிட்டு 4-ஆம் ஆண்டு நாட்டியஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது
திருச்சி மாவட்டம்
தொட்டியத்தில் சிவராத்திரியை முன்னிட்டு 4-ஆம் ஆண்டு நாட்டியஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது
தொட்டியம் மார்ச் 9
திருச்சி மாவட்டம் தொட்டியம் தனியார் திருமண மண்டபத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு தொட்டியம் ஸ்ரீ ராகவேந்திரா கலாலயம் நடத்திய 4-ஆம் ஆண்டு நாட்டியஞ்சலி நிகழ்ச்சி குத்துவிளக்கேற்றி துவங்கியது மகா சிவராத்திரியை முன்னிட்டு நள்ளிரவு வரை நடந்த இந்த நாட்டியஞ்சலி நிகழ்ச்சியில் சிறுமிகள் பல்வேறு விதமான நாட்டியங்கள் ஆடி மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவபெருமானுக்கு நாட்டியஞ்சலி செலுத்தினர் மேலும் கிருஷ்ண பகவான் சிறு வயது லீலைகளை நாட்டிய மூலமாக கதையாக நடனமாடி பொதுமக்களையும் பார்வையாளர்களையும் அசத்தினர்.
இதில் ஸ்ரீ ராகவேந்திரா கலாலயம் குரு ஸ்ரீமதி சிந்துலட்சுமி நவீன்குமார், மற்றும் குளித்தலை யாழ் அகாடமி குரு ஸ்ரீமதி பவானிசந்தோஷ் மற்றும் பொதுமக்கள் பெண்கள் கலந்துக்கொண்டு சிறுமிகளின் நாட்டியத்தை கண்டு மகிழ்ந்தனர் முன்னதாக அனைவரையும் தொட்டியம் ஸ்ரீ ராகவேந்திரா கலாலயம் நிறுவனர் கல்யாணி ராமச்சந்திரன் வரவேற்றார்