பழனி அடிவாரம் சிறு, குறு வர்த்தகர்களுக்காக விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக வணிகர்.

பழனி அடிவாரம் சிறு, குறு வர்த்தகர்களுக்காக விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக வணிகர் சம்மேளன மாநில தலைவர் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
பழனியில் தனியார் திருமண மண்டபத்தில் இன்று தமிழக வணிகர் சம்மேளனம் சார்பில் நிர்வாகிகள் கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ஜோதிலட்சுமி தலைமை வகித்தார். பழனி ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் தமிழ்ச்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். தமிழகத்தில் சிறு குறு வர்த்தகர்களுக்கான மத்திய மாநில அரசுகள் வழங்கும் சலுகைகள், காப்பீட்டு திட்டம் குறித்து விளக்கினார். மேலும் வணிகர்கள் உறுப்பினராக சேர்வதன் மூலம் விபத்தின் போது ரத்த தேவை, வங்கி கடனுதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக வணிகர் சம்மேளனம் செய்து வருவதை தெரிவித்தார். மேலும் பழனியில் ஆக்கிரமிப்பு அகற்றும் என்ற பெயரில் சிறு குறு வர்த்தகர்களை அரசு அதிகாரிகள் அலைக்கழிப்பதை தவிர்க்க வேண்டியும், அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்துவிட்டு கடைகளை அகற்றவும் கோரி விரைவில் மாபெரும் அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார். முன்னதாக புதிய உறுப்பினர் சேர்க்கையும், உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டது.