சுட்டெரிக்கும் கோடை வெயிலில் குளுகுளு மோர், தஞ்சாவூரில் இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் வழங்கியது
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது, குழந்தைகள், பொதுமக்கள் என பலரும் கடும் வெயிலால் அவதியுற்று வருகின்றனர், மேலும் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், பொதுமக்கள் வாட்டி வதைக்கும் வெயிலால் பாதிப்பு அடைகின்றனர், இந்நிலையில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற 48 கோவில்களில் கோடை வெப்பத்தை தணிக்க மோர் வழங்க உத்தரவிட்டுள்ளது, இதனையடுத்து தஞ்சாவூரில் மிகவும் பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு தினந்தோறும்
குளுகுளு மோர் வழங்கப்பட்டு வருகிறது, இதனால் பக்தர்கள் வெயிலில் இருந்து காத்துக்கொண்டு நிம்மதி அடைந்துள்ளனர்
CATEGORIES தஞ்சாவூர்