வேலூரில் இரு வேறு இடங்களில் பறக்கும் படையினரின் வாகன தணிக்கையில் உரிய ஆவணம் இல்லாத 5 லட்சம் பணம் பறிமுதல். RDO விடம் ஒப்படைப்பு
மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் வசூலித்த பணம் என்றும், கட்டிட தொழிலாளிகளுக்கு கூலி கொடுக்க எடுத்துச் சென்ற பணம் என்றும் தொழிலாளர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டும் என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்கள்.
2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி வேலூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் அந்தவகையில்
வேலூர் அடுத்த அலமேலு ரங்காபுரத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர் கருகம்புத்தூரில் இருந்து அலமேலுரங்காபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற விஜயன் (37) என்பவரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாத 2 லட்சத்து 53 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
மைக்ரோ பைனான்ஸில் வேலை செய்வதாகவும் மகளீர் குழுக்களிடம் வசூல் செய்த தொகை இது என அதிகாரிகளிடம் இந்த நபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல வேலூர் கோட்டை பின்புறம் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் கொணவட்டம் பகுதியை சேர்ந்த சையத் அக்பர் பாஷா (42) என்பவரிடமிருந்து உரிய ஆவணம் இல்லாத 2 லட்சத்து 50 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
தான் ஒரு கட்டிட ஒப்பந்ததாரர் என்றும் கட்டிட தொழிலாளிகளுக்காக கொடுக்க பணம் எடுத்துச் சென்றதாகவும் தற்போது அவர்களுக்கு நான் என்ன பதில் சொல்வது என சையத் பாஷா தெரிவித்துள்ளார்.
இரு வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 5 லட்சம் பணம் வேலூர் ஆர்டிஓ கவிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.