BREAKING NEWS

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்படும் 829 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பிரித்து அதனை சரிபார்த்து அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி துவக்கம்

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்படும் 829 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பிரித்து அதனை சரிபார்த்து அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி துவக்கம்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நீலகிரி நாடாளுமன்ற உள்ள 6 தொகுதிகளில் தேர்தல் வாக்குப்பதிவு தினத்தில் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் VVPAT கருவிகள் ஆகியவற்றை முதற்கட்டமாக கணினி மூலம் குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நீலகிரி மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான மு.அருணா தலைமையில் நடைப்பெற்றது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட ஆட்சித் தலைவருமான மு.அருணா முன்னிலையில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையை அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் முன்னிலையில் திறக்கப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 829 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு பிரித்துக் அனுப்பு பணிகளும் இன்று துவங்கியது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட ஆட்சியரமான மு.அருணா, நீலகிரி நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசு கட்சியினர் முன்னிலையில் இன்று திறக்கப்பட்டு சரி பார்க்கும் பணிகள் நடைபெற்றதாக கூறினார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்யப்படும் தொகையினை விட நீலகிரி மாவட்டத்தில் அதிகமான தொகையினை வைத்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, கேரளா கர்நாடகா தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களில் நீலகிரி மாவட்டம் அமைந்துள்ளதால் அதிக தொகைகள் பிடிபடுவதாக அவர் தெரிவித்தார்.

பேட்டி: மு.அருணா, தேர்தல் அதிகாரி

Share this…

CATEGORIES
TAGS