BREAKING NEWS

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும், அதிமுகவை தேடித்தான் கூட்டணி கட்சிகள் வரும், ஓபிஎஸ் பாஜகவை தேடி போனார் சீட்டு இல்லாமல் வெளியேறி விட்டார் முன்னாள் அமைச்சர் அதிமுக அமைப்பு செயலாளர் ஓ எஸ் மணியன் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும், அதிமுகவை தேடித்தான் கூட்டணி கட்சிகள் வரும், ஓபிஎஸ் பாஜகவை தேடி போனார் சீட்டு இல்லாமல் வெளியேறி விட்டார் முன்னாள் அமைச்சர் அதிமுக அமைப்பு செயலாளர் ஓ எஸ் மணியன் பேட்டி

மயிலாடுதுறையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் எஸ் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சர் மனியன் பங்கேற்று தேர்தல் வியூகம் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் நிகழ்ச்சியில்
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் அஇஅதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் பாபு, அதிமுக இளைஞரணி இணை செயலாளர் கோமல் அன்பரசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் பிற அணி மாவட்ட செயலாளர்கள், பிற அணி பொறுப்பாளர்கள் பங்கேற்று பேசினர் நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றும் மறைந்த அதிமுக அவைத் தலைவர் காளிமுத்து தெரிவித்தது போல் டெல்லிக்கே பாதுஷா ஆனாலும் தமிழ்நாட்டில் பக்கிரி ஆகத்தான் வரவேண்டும். அதிமுகவை தேடித்தான் தேசிய கட்சிகள் கூட்டணிக்கு வர வேண்டும், ஓபிஎஸ் தானாக தேடிப் போய் ஆதரவு தெரிவித்தார் ஆனால் ஒரு சீட்டு தருவதாக கூறி வெளியே அனுப்பி விட்டார்கள், என்று கூறினார் அதிமுக ஆட்சியில் எதுவுமே நடக்கவில்லை என்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த திரு ஓ எஸ் மணியன் ஆமாம் கனிமொழி தெரிவித்தது உண்மைதான் தெருக்கள் பெட்டிக்கடைகளில் கஞ்சா விற்கவில்லை, ஜாதி கலவரங்கள் எதுவும் இல்லை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எதுவும் நிகழவில்லை என்று பதில் அளித்தார்.

CATEGORIES
TAGS