இந்தியா என்பது மிகப்பெரிய ஒரு ஜனநாயக நாடு அது இன்றைக்கு ஒரு குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக இருக்கிறது

அயோத்தியில் ஸ்ரீ ராமர் கடவுளை தரிசனம் செய்தவர் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மேலும் அவர் ஒரு ஆஞ்சநேயர் பக்தர் முதலமைச்சர் கைது என்பது அராஜகத்தின் உச்சகட்டம்
வேலூரில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் பேட்டி
நாடாளுமன்றத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து வேலூர் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான் வேலூர், பேர்ணாம்பட்டு,குடியாத்தம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார் இதனைத் தொடர்ந்து கடந்த 20 ஆம் தேதி போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்
இதனை அடுத்து இன்று வேலூர் காந்தி ரோடு, பாபு ராவ் தெரு, சுண்ணாம்பு கார வீதி லாங்கு பஜார் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள பொது மக்கள் மற்றும் வியாபாரிகளிடம் வாக்குகளை சேகரித்தார் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான் முன்னதாக அப்பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் நடிகர் மன்சூர் அலிகான் தொழுகை மேற்கொண்டார்.
இதில் அப்பகுதி பொதுமக்கள் மன்சூர் அலிகான் உடன் புகைப்படம் மற்றும் செல்பிகள் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.
வாக்கு சேகரிப்புக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான் கூறுகையில்
அமைச்சர் துரைமுருகன் பெரியவர் அவரெல்லாம் அழக்கூடாது சிரிக்க வைப்பதற்காக பிறந்தவர் தமிழ் நாடு சட்டசபையில் அனைவரையும் சிரிக்க வைப்பவர் துரைமுருகன்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்ந்து தன்னுடைய மகனை கைது செய்வார்களா என்ற ஒரு நினைப்பில் இருக்கிறார் அமைச்சர் துரைமுருகன். அதற்கு கவலைப்பட தேவையில்லை.
இந்தியா என்பது மிகப்பெரிய ஒரு ஜனநாயக நாடு அது இன்றைக்கு ஒரு குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக இருக்கிறது.
தேர்தல் நேரத்தில் இராணுவ ஹெலிகாப்டரில் பயணம் செய்த முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி அரசை டிஸ்மிஸ் ஆனது. அது உண்மையான ஜனநாயகமாக இருந்தது. அதேபோன்று இந்த ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும். பள்ளி குழந்தைகளை வைத்து ரோட் ஷோ நடத்துகிறார் பாரத பிரதமர் நரேந்திர மோடி.
400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். முற்றிலும் இது ஒரு நாடகத் தேர்தல் என்பதுதான் அர்த்தம்.
அயோத்தியில் ஸ்ரீ ராமர் கடவுளை தரிசனம் செய்தவர் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். மேலும் அவர் ஒரு ஆஞ்சநேயர் பக்தர். முதலமைச்சர் கைது என்பது அராஜகத்தின் உச்சகட்டம்.
ஏற்கனவே தி.மு.க-வில் 38 எ.ம்.பிக்கள் இருக்கின்றனர் அவர்கள் இதுவரை என்ன செய்தார்கள். அவர்கள் எதுவும் செய்யவில்லை. அதனால்தான் நான் வேலூரில் போட்டியிடுகிறேன்.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ-வை விட மிகப்பெரிய நடிகர் யாரும் இல்லை. அவர்தான் விஸ்வ குரு மற்றும் பரம குரு. நல்ல மனிதர் செல்லூர் ராஜு. மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா ஜெயலலிதா இருக்கும்பொழுது சுமார் 11 மணி நேரம் குனிந்து கும்பிட்டபடியே நிற்பார் அவர் அப்படி ஒரு அம்மாவின் பக்தன்.
நடிகர் விஜய் என்னுடன் தான் முதல் படம் நடித்தார் பத்துக்கும் மேற்பட்ட படங்கள் அவருடன் நான் நடித்துள்ளேன்.
நடிகர் விஜய் ரசிகர்களுக்கு நான் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன் அவர் வரவேண்டிய நேரத்தில் சரியாக வருவார். வந்த பின் உங்களை நன்றாக சரியாக வழி நடத்துவார்.
