நீலகிரி மாவட்டம் உதகை – குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் நொண்டிமேடு பகுதியில் குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம்

நீலகிரி மாவட்டம் உதகை – குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் நொண்டிமேடு பகுதியில் குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் உதகை நகராட்சிக்குட்ப்பட்ட 33வது வார்டு பகுதியான நொண்டிமேடு பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஒரு மாத்திற்கும் மேலாக முறையாக குடிநீர் வராததால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இது குறித்து பல முறை நகராட்சி நிர்வாகத்திற்கும், நகர மன்ற உறுப்பினருக்கும் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி இன்று காலை உதகை – குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் அப்பகுதி நீலகிரி மாவட்டம் உதகை – குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் நொண்டிமேடு பகுதியில் குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம்யில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து சம்பவம் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.