BREAKING NEWS

ஆண்டிபட்டி காளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வேல் அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும், பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரில் மையப்பகுதியில் அமைந்துள்ள காளியம்மன் கோவில்
300 ஆண்டுகள் பழமையானது
ஆண்டு தோறும்
இங்கு நடைபெறும் பங்குனித்திருவிழா பிரசித்தி பெற்றது
நடப்பாண்டு பங்குனி திருவிழாவின்
இரண்டாம் நாளில்
நூற்றுக்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள்
48 நாட்கள் ஒரு மண்டல காலம் விரதமிருந்து
வாயில் வேல் அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும், பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும்
தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்
நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் ஆண்டிபட்டி ஓடைத்தெருவில் இருந்து
ஊர்வலமாக கடை வீதி வழியாக ஒரு கிலோ மீட்டர் தூரம் நாதஸ்வரம் மற்றும் மேள தாளங்கள் முழங்க அருள் வந்து ஆடியபடி வந்து கோயிலை அடைந்து
மூலவர் காளியம்மனை வழிபட்டு தங்களது நேர்த்திக் கடனை முடித்துக்கொண்டனர்
இவ்விழாவில் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்

CATEGORIES
TAGS