ஓசூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா

ஓசூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா மூன்று மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம்
ஓசூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மரகதாம்பிகை உடனுரை ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் கோவிலில் இன்று மாசி மாத உற்சவ தேர் திருவிழா நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஒசூரில் மலைக்கோயில் என்று அழைக்கப்படும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த மாதம் 21 ஆம் தேதி மாசி மாத உற்சவ தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ மரகதாம்பாள் உடனுறை ஸ்ரீசந்திர சூடேஸ்வரர் சுவாமிகளுக்கு தினந்தோறும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது. தினந்தோறும் சுவாமிகள் சிம்மவாகனம், மயில் வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகன அலங்காரங்களில் வீதி உலா வந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அருள் பாலித்தனர்.
திருவிழாவின் முக்கிய நாளான இன்று தேர் திருவிழா நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீமரகதாம்பாள் தயார் மற்றும் ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி எடுத்து வந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அமர வைத்து திருத்தேர் இழுக்கப்பட்டது. ஓசூர் சார் ஆட்சியர் பிரியங்கா, ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் , மாநகராட்சி ஆணையர் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேர் திருவிழாவை தொடங்கி வைத்தனர்.